விம்பிள்டன் ஆடவர் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வென்றுள்ளார்.
விம்பிள்டன் தொடரின் இறுதிப்போட்டியில் ஜாம்பவான் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு முதல்முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்ற அல்காரஸ், தொடர்ந்து 2வது முறையாக வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
விம்பிள்டன் தொடரின் இறுதிப்போட்டியில் ஜோகோவிச் – அல்காரஸ் இன்று மோதினர்.
கடந்த ஆண்டு அடைந்த தோல்விக்கு ஜோகோவிச் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜோகோவிச்சை மீண்டும் வீழ்த்தி விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை அல்காரஸ் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.