கூகுள் மேப்-பை நம்பி ஆபாத்தான படிக்கட்டில் சொகுசு காரை இறக்கி சிக்கிக்கொண்ட கர்நாடக மாநில சுற்றுலா பயணிகளை உள்ளூர் மக்கள் உதவியுடன் காவல்துறையினர் மீட்டனர்.

கர்நாடகாவை சேர்ந்த சிலர், உதகைக்கு காரில் சுற்றுலா சென்றனர். பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது உதகை – கூடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் GOOGLE MAP செயலி உதவியுடன், ஓட்டுநர் காரை இயக்கியுள்ளார்.

போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை என மேப்பில் காட்டப்பட்ட பகுதி வழியாக காரை இயக்கியிருக்கிறார். அப்போது தவறான பாதையில் சென்றதால், பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதை படிக்கட்டுகளில் கார் சிக்கியது.

இதனையடுத்து உள்ளூர் மக்கள் உதவியுடன் காவல்துறையினர் அந்த காரை எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த பகுதியை கடந்து செல்ல உதவினர்.

இந்த சம்பவம் தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி எந்த ஒரு காரியத்திலும் வெற்றியடைய முடியாது என்பதை உணர்த்தியுள்ளதை அடுத்து கூகுள் நிறுவனத்தின் செயலியை சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.