சத்தியமங்கலம்:
சத்தியமங்கலத்திம் அருகே ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடாத கார் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறாம் தேதி புங்கம்பள்ளி கிராமத்தில் மூன்று மாத குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டது. இந்நிலையில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்சுக்கு வழி விடாமல், ஆம்புலன்சை முந்திக் கொண்டு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பல கிலோ மீட்டர் வரை ஆம்புலன்ஸ்-க்கு வழி விடமால் கார் சென்றுள்ளதை அறிந்த போக்குவரத்து துறை அதிகாரிகள், அந்த காருக்கு அபாரதம் விதித்தனர்.
கோபி வட்டார போக்குவரத்து உத்தரவின்படி இந்த அபராதம் விதிக்கப்பட்டது. தனது தவறை உணர்ந்து கொண்ட கார் ஓட்டுனர், தவறுக்கு மன்னிப்பு கோரியதுடன் அபராதமாக விதிக்கப்பட்ட ரூ. 10,000-ஐ உடனடியாக செலுத்தினார்.