டெல்லி: மாநில அரசுக்கு எதிராக போராடியவர்களின் வீடுகளை உ.பி. மாநில அரசு புல்டோசர் கொண்டு இடித்து தள்ளிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உ.பி. மாநில அரசு அதிகாரிகள் சட்டத்தின் கீழ் உரிய விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி யதுடன், வீடுகள் இடிப்பு குறித்து விளக்கம் தொடர்பாக பிரமான பத்திரம் அளிக்க உத்தரவிட்டு உளளது.
முகமது நபி குறித்து பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தும், அவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தும் ஜூன் 10 வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்குப் பிறகு நாடு முழுவதும் முஸ்லிம்கள் பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறையாக மாறியது. கல்வீச்ச, வாகனங்களுக்கு தீ வைப்பு என மாறியதால், போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், ஜாவேத் வெள்ளிக்கிழமை அலகாபாத் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஜாவேத் முகமதுதான் இந்த வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாகவும், இதற்காகவே அவரது வீடு நாசவேலைக்கு இலக்காகி இருப்பதாகவும் போலீசார் கூறினர்.
அதைத்தொடர்ந்து, உ.பி.யில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடித்துதள்ள மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவிட்டார். அதன்படி, ஜூன் 11ந்தேதி அன்று சஹாரன்பூரில் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகள் புல்டோசர்களைக் கொண்டு காவல்துறையினரால் இடித்துத் தள்ளப்பட்டன. அதேபோல கான்பூரில், முகமது இஷ்தியாக்கின் வீட்டையும் போலீசார் இடித்துள்ளனர். ஜூன் 12) அன்று முகமது வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் அஃப்ரீன் பாத்திமாவின் வீடும் இடிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், முகமது வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் மற்றும் மகள் ஒரு மாணவி. ஜாவேத் முகமதுவின் மனைவி பெயரில் உள்ள அவரது வீடு, கட்டுமான விதிகளை மீறியதாகக் கூறி, அலகாபாத் மேம்பாட்டு ஆணையத்pதன் உத்தரவால் இடிக்கப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டது.
யோகி அரசின் அடாவடி நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. ஆனால், யோகி அரசு அதை கண்டுகொள்ளாமல், அரசுக்கு எதிராக போராடுபவர்களை நசுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், யோகி அரசன் நடவடிக்கை சட்டவிரோதமானது. இதற்கு காரணமாக அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் செய்த செயலுக்கு சட்டவிதிகள் படி தண்டனை வழங்க வேண்டும் என்று போர்க்கொடி எழுந்துள்ளது. இந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது வேண்டுமென்றே சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது எனக் கூறினார். நாகரீக சமுதாயத்தில் எது நடக்கக் கூடாதோ, அதுவே நடந்துள்ளது என்று பல முன்னாள் நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகளான பி.சுதா்சன் ரெட்டி, வி.கோபால கௌடா, ஏ.கே.கங்குலி, டெல்லி உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, கா்நாடக உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகமது அன்வா், மூத்த வழக்குரைஞா்கள் பிரசாந்த்பூஷண், சாந்திபூஷண், இந்திரா ஜைசிங் உள்ளிட்டோா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்குக் கடிதம் எழுதியிருந்தனர். அதில் நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மேலும், உத்தரப்பிரதேசத்தில், அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள், இடிக்கப்படுவதை எதிர்த்தும், புல்டோசர் கொண்டு வீடுகள் இடிக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரியும் முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத தொடர்ந்திருந்தன.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசிடம் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . உ.பி. அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், உ.பி. மாநில அரசு அதிகாரிகள் சட்டத்தின் கீழ் உரிய விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், வீடுகள் இடிப்பு குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.