சென்னை: புதிய திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்களை சமூக வலைதளத்தில் வெளியிட தடை விதிக்க முடியாது.

புதிய படங்கள் திரைக்கு வந்ததும் அது பற்றிய விமர்சனங்களை முதல் 3 நாட்களுக்கு யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ‘சில படங்கள் நல்ல விமா்சனங்களைப் பெறும்போது ஏற்றுக்கொள்ளும் திரைத் துறை எதிா்மறை விமா்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ எனவும் நீதிமன்றம் கூறியது.

நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதி ஆகியோர் இந்துக்களுக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அவர்களின் பல கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வெளியான கங்குவா படம் கடுமையான எதிர்மறை விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும், பாஜக மற்றும் இந்து அமைப்புகள், படத்துக்கான டிக்கெட் பணத்தை அவர்களுக்கு கணக்கு அனுப்பி டிரெண்டிங் செய்தனர். இதனால் கங்குவா படம் முடங்கியது.  மேலும் சமூக ஊடகங்களிலும் சூர்யா, ஜோதிகா குறித்த கடுமையான விமர்சனங்களும் எழுந்தன.

இதன் எதிரொலியாக திரையரங்குகளில் படங்கள் வெளியான 3 நாள்களுக்கு விமா்சனங்களை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில்,  புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமா்சனங்களை வெளியிடுவது தொடா்பாக விதிமுறைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும்போது, அவை குறித்து எதிா்மறை விமா்சனங்கள் வெளியிடப்படுவதால் படங்கள் தோல்வி அடைய நேரிடுகிறது. இதனால் திரைத் துறையில் அசாதாரண சூழல் நிலவுகிறது  என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுமீது சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. மனுவை விசாரித்த நீபதி சவுந்தர்,  முன்பு, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமா்சனங்கள் வெளியாவதால், படத்தை பாா்க்க விரும்பும் மக்களின் மனநிலை மாறுகிறது. படத்தில் நடித்த நடிகா்கள், இயக்குநா் குறித்து அவதூறு பரப்பப்படுகிறது எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, தனிப்பட்ட வகையில், அவதூறு பரப்பினால், அதுகுறித்து காவல் துறையிடம் புகாா் அளிக்கலாம் என தெரிவித்த நீதிபதி, விமா்சனம் கருத்துச் சுதந்திரம் என்பதால், பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. சில படங்கள் நல்ல விமா்சனங்களைப் பெறும்போது ஏற்றுக்கொள்ளும் திரைத் துறையினா் எதிா்மறை விமா்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தாா். மேலும், திரைப்படங்கள் வெளியான 3 நாள்களுக்கு விமா்சனங்கள் வெளியிட தடை விதிக்க மறுத்த நீதிபதி, வழக்கு தொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.