சென்னை:
மிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உளள 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடம் காலியாக உள்ளது. இதற்கான தேர்தல் ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து தேர்தல் அட்டவனையும் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் மே 24-ம் தேதி தொடங்கி, 31-ம் தேதியுடன் முடிவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான ஆரம்ப நாள் மே 24-ம் தேதி. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மே 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூன் 1-ம் தேதி. வேட்பு மனுக்களைப் பரிசீலனை செய்யப்படும் என்றும், வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான கடைசி நாள் ஜூன் 3-ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 10-ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவு நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாக்கு எண்ணிக்கை ஜூன் 10-ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும் நாள் ஜூன் 13-ம் தேதி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு மாநிலங்களவையில் 18 பேருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இதில், 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதி முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து திமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.