புற்று நோயாளி ராகவ் சந்தக் ஐசிஎஸ்இ தேர்வில் 95.8 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று சாதனை.
அனைத்து பிரச்சனைகளோடும் போராடி 16 வயதான ராகவ் சந்தக் ஐசிஎஸ்இ 2016 தேர்வில் 95.8 சதவீதம் மதிப்பெண் பெற்று வருங்கால மாண்வர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக திகழ்வார். ஒரு புற்று நோயாளியான ராகவ் சந்தக் பத்தாம் வகுப்பு ஐசிஎஸ்இ 2016 தேர்வில் 95.8 சதவீதம் பெற்று வாழ்க்கையில் எதுவும் இலவசமாகவோ சுலபமாகவோ கிடைத்து விடாது என்று நிரூபித்து விட்டார்.உண்மையில், அவர் இந்த நிலையை எட்டுவதற்கு ஒரு பெரிய விலையைக் கொடுத்துள்ளார்.
இளங்கன்று பயமறியாது என்பதை ஆமோதிக்கும் விதமாக இந்த சிறுவன் எப்படி இந்த சாதனையைப் புரிந்தார் என்று ஒரு சிறிய விரிவாக்கம்.
அக்யூட் லிம்ஃபோபிளாஸ்டிக் லுகேமியா (ALL) இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், பொதுத் தேர்வுகளில் போட்டியிட தனது நம்பிக்கையை ராகவ் இழக்கவில்லை. இரண்டு மாதங்கள் மட்டுமே பள்ளி சென்ற ராகவ், தேர்வுக்குத் தேவையானதை கீமொதெரபி நடக்கும் போது மருத்துவமனையிலிருந்தே தயார் செய்தார். தன்னுடைய மகனின் முயற்சியை அவரது தந்தை மனோஜ் சந்தக் பெருமிதமாக பாராட்டினார். மேலும் ராகவ் ஒவ்வொரு மாதமும் ஏழு நாட்கள் கீமொதெராபிக்காக மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது ஆனால் அது அவர்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தான் குறைத்ததே தவிர அவரது மன தைரியத்தையும் நம்பிக்கையையும் அல்ல “.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு சான்றாக ராகவினுடைய வாழ்வில் பலர் அவருக்கு உதவினர்.
ராகவ் தனியாக நடக்க கூட முடியாத நிலையில் கிட்டத்தட்ட அவரது வாழ்க்கையில் எல்லோரும் அவருக்கு உதவ முன்வந்தனர். கொல்கத்தாவிலுள்ள ஹெரிடெஜ் பள்ளியில் பயிலும் ராகவிற்கு அவரது ஆசிரியர்களிடமிருந்து பல உதவிகள் கிடைத்தது. ராகவின் ஆசிரியர்கள் அவர் பாடத்தை சுலபமாக புரிந்து கொள்ள குறிப்புகள் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.மேலும் அதே வகுப்பில் பயிலும் அவரது உறவினரும் அவருக்கு உதவியுள்ளார். சிறப்பு ஆசிரியர் குழு ஒன்று அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டு, நோய் தொற்றிக்கொள்ளாமல் இருக்க பள்ளிக்கு வெளியில் அவருக்கு பாடம் எடுத்தனர்.
அவரால் தேர்வு எழுத முடியுமா என்று அவரது குடும்பத்திற்கு உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், அவரது ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகள் அவருக்கு பெரும் உதவியாய் இருந்து நம்பிக்கை அளித்தனர். அவரது அத்தியாவசியமான நேரத்தையும் ஆரோக்கியத்தையும் காப்பாற்ற அவர்கள் திடத்தீர்மானமாக இருந்தனர். “அவனால் தேர்வு எழுத முடியாது என்று நினைத்தோம். பள்ளிகுச் சென்று இதைப் ப்ற்றி நாங்கள் கூறினோம். நீங்கள் மருத்துவ நிலையை பார்த்துகொள்ளுங்கள் நாங்கள் அவனது படிப்பை கவனித்து கொள்கிறோம் என்றனர்” என்று ராகவ் தந்தை கூறினார்.
“என் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர் மற்றும் எனது குடும்ப மருத்துவர் ஆகியோரின் உதவி இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது,” என்று வருங்காலத்தில் ஐஐடியில் சேர விருப்பப்படும் ராகவ் கூறினார்.
விரைவில் அவரது கனவுகள் உருவம் பெறும் ஏனெனில் அவர் மிகவும் உறுதி வாய்ந்த நம்பிக்கை உள்ள சிறுவன். உண்மையில், ஆசைப்பட்டால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற பாடத்தை ராகவ் நமக்கு கற்று கொடுத்துள்ளார். நாம் அவருக்கு ஒரு ஆரோக்கியமான எதிர்காலம் அமைய வாழ்த்துவோம்.