சென்னை:   யாஷ்  புயல் காரணமாக தமிழகத்தில் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றத்தழுத்த தாழ்வு மண்டம் புயலாக மாறி வருகிறது. இந்த புயலுக்கு  யாஷ்’ என பெயரிடப்பட்டு உள்ளது.  புயல் காரணமாக 22 ரயில்கள் தற்காலிக ரத்து செய்வதாக தெற்கு ரயில்வேஅறிவித்து உள்ளது. அதன்படி,

நாகர்கோவில் -ஷாலிமார் சிறப்பு ரயில் மே 23 வரை,  ஷாலிமார் -நாகர்கோவில் சிறப்பு ரயில் மே26 வரை, ஹவுரா -கன்னியாகுமரி சிறப்பு ரயில் மே24 வரை, ஹவுரா -சென்னை சிறப்பு ரயில் மே24 முதல் மே 26 வரை, சென்னை – ஹவுரா சிறப்பு ரயில் மே24 முதல் மே 26 வரை, ஷாலிமார் -திருவனந்தபுரம் மே25 வரை, எர்ணாகுளம் -பாட்னா மே24 முதல் மே 25 வரை, பாட்னா- எர்ணாகுளம் மே27 முதல் மே 28 வரை, திருச்சி – ஹவுரா மே 25 வரை, ஹவுரா – திருச்சி மே 27 வரை உள்ளிட்ட 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகும்  யாஷ்  புயல் காரணமாக முன்னெச்சரிக்கை 22 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.