புதுடெல்லி:
சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி ரத்து இன்று அமலுக்கு வருகிறது.
அண்மையில் மத்திய அரசு சார்பில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சமையல் எண்ணெய்களுக்கு வரி விலக்கு அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2024 மார்ச் வரை ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு செஸ் மற்றும் சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி ரத்து இன்று முதல் அமலுக்கு வருகிறது.