சென்னை: ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு வராத நிலையில், கனடா பிரதமர் போன் மூலம் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பிரதமர் மோடி டிவிட் பதிவில் தெரிவித்துள்ளார். அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 15 முதல் 17 வரை கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஜி7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த கூட்டமைப்பில் உள்ள இந்தியாவுக்கு இதுவரை கடனா அழைப்பு விடுக்காதது பேசும்பொருளாக மாறியது. கடனாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் மோசமடைந்ததால், G7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு கனடா அழைக்கப்படவில்லை என்று வறப்பட்டது.
கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஜி7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. மற்ற நாட்டு தலைவர்கள் அழைக்கப்பட்டபோதும் இந்தியாவுக்கு எந்த அழைப்பும் வராததை காங்கிரஸ் விமர்சித்தது.
இந்தநிலையில், பிரதமர் மோடியிடம் கனடா பிரதமர் போன் மூலம் பேசி அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு போன் மூலம் கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மார்க் கார்னியிடமிருந்து அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி. சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு அவரை வாழ்த்தினேன், மேலும் இந்த மாத இறுதியில் கனனாஸ்கிஸில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தேன்.
மக்களுக்கு இடையிலான உறவுகளால் பிணைக்கப்பட்ட துடிப்பான ஜனநாயக நாடுகளாக, இந்தியாவும் கனடாவும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட ஆர்வங் களால் வழிநடத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் இணைந்து செயல்படும். உச்சிமாநாட்டில் எங்கள் சந்திப்பை எதிர்நோக்குங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு தற்போது அழைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது