ஒட்டாவா: கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் நடைபெற்ற கருப்பினத்தவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மண்டியிட்டு அமர்ந்து அமெரிக்காவில் கொல்லப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்காக அஞ்சலி செலுத்தினார்.

இந்தப் போராட்டத்தில் கனடா பிரதமர் கலந்துகொள்வாரா? என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில், கருப்புநிற முகக் கவசம் அணிந்து அந்த ஆர்ப்பாட்டத்தில் திடீரென கலந்துகொண்டார் அவர். கனடாவின் நாடாளுமன்ற கட்டடத்தை அடையும்வரை, அவர் கருப்பு முகக் கவசம் அணிந்திருந்தார்.

ஆனால், இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஜஸ்டின் ட்ரூடோ எதுவும் பேசவில்லை. சிலர் பேசியதற்கு தலையசைத்து க‍ைத்தட்ட மட்டும் செய்தார். இந்தப் ப‍ேச்சில், நிறைவெறிக்கு எதிராக நடுநிலை என்பது கிடையாது என்ற கருத்தும் அடக்கம்.

கூட்டத்தில் சிலர், அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஆதரவாக, கனடியப் பிரதமர் நிற்க வேண்டுமென்றும் கோஷமிட்டனர். கனடா பிரதமர் அஞ்சலி செலுத்துகையில், மொத்தம் 9 நிமிடங்கள் மண்டியிட்டிருந்தார்.