ஒட்டாவா:
உலக நாடுகள் சிலவற்றில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும், மூன்றாம் பாலினத்தவருக்கம் உரிமைகள் இருக்கின்றன. ஆனால் பெரும்பான்மையான நாடுகளில் இவர்கள் ஒதுக்கப்பட்ட மக்களாகவே நடத்தப்படுகிறார்கள். இவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதுடன் சமூக அங்கீகாரமும் தரப்படுவதில்லை.
இந்தியா போன்ற நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்கள், தங்களை வெளிப்படுத்த தயங்கும் நிலைதான் இருக்கிறது. அதோடு, உச்சநீதிமன்றம் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான தீர்ப்பை அளித்தபோது, அரசியல் தலைவர்கள் பலரும்கூட அதை குறை கூறினார்கள்.
ஆனால் மேல உள்ள படத்தைப் பாருங்கள்…
கனடா நாட்டில் ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு ஆதரவான பேரணி நடந்தது.
அதில் கலந்துகொண்டு உரிமைக்குரல் கொடுப்பவர்.. அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின்!