ட்டாவா;

டுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கனா பிரசாரத்தை கனடா பிரதமர் தொடங்கி உள்ளார்.

கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவர் கடந்த 14-ந் தேதி கனடாவின் 24-வது பிரதமராக பதவியேற்றார்.

தற்போதைய கனடா நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதம் வரை இருக்கும், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த மார்க் கார்னி அழைப்பு விடுத்தார்.

அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ந் தேதி கனடா நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் மார்க் கார்னி பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் கனடா-அமெரிக்கா இடையே சிக்கலான வர்த்தக உறவு நீடிக்கும் நிலையில் அதற்கான தீர்வுகளை முன்வைத்து பிரதமர் மார்க் கார்னி பிரசாரம் செய்வார் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.