கனடாவில் 18 சீக்கிய எம்.பி.க்கள் வெற்றி பெற்று உள்ளனர், இவர்களே அங்கு ஆட்சியை முடிவு செய்யும் நிலையில் உள்ளனர். ஆனால் சீக்கியர்களின் பூர்விகமான இந்தியாவில், 13 பேர் எம்.பி.க்கள் மட்டுமே மக்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவலம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு முதல் அங்கு சீக்கியர்களின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது.
கனடாவில் மொத்தம் உள்ள 338 தொகுதிகளில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டது. இதில், ஆளும் லிபரல் கட்சி 157 இடங்களையும், எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. தனிப்பெரும் கட்சியாக லிபரல் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், மெஜாரிட்டி எண்ணிக்கையான 170க்கு இன்னும் 13 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
இந்த நிலையில், பிளாக் குயெபெக்கோயிஸ் 32 இடங்களையும், நியூ டொமாக்ரடிக் பார்ட்டி(என்.டி.பி) 24 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. எனவே, இந்த கட்சிகளின் ஆதரவில்தான் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக பதவியேற்க முடியும்.
நியூ டொமாக்ரடிக் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத்சிங் உள்ளார். இந்த கட்சியினர் போட்டியிட்ட நிலையில், ஒன்ராறியோ (10), பிரிட்டிஷ் கொலம்பியா (4), ஆல்பர்ட்டா (3) மற்றும் கியூபெக் (1) ஆகிய மாகாணங்களில் 18 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 13 பேர் லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்கள், நான்கு பேர் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் என்டிபி-யைச் சேர்ந்தவர்கள்.
ஆனால், கனடாவிலும் இந்தியாவிலும் சீக்கியர்கள் சுமார் 2% மக்கள்தொகையில் உள்ளனர், ஆனால் அரசியலில் அவர்களின் பிரதிநிதித்துவம் ஒப்பிடமுடியாது . கனடாவில் 18 எம்.பி.க்கள் சீக்கிய பாரம்பரியத்தை கொண்டுள்ளனர், அதே நேரத்தில் இந்தியாவில் மக்களவையில் 13 சீக்கிய எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்.
தற்போது ஆட்சியை ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் கைப்பற்ற ஜக்மீத்சிங் தலைமையிலான என்.டி.பி. கட்சியின் ஆதரவு கட்டயமாகி உள்ளது. ஜக்மீத்சிங் கட்சியின் எம்.பி.க்களின் உதவியுடன் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது