சென்னை: பள்ளிக் கூடங்களின் பெயர்களில் உள்ள சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்  ஒத்தி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக் கூடங்களின் பெயர்கள், அதை உருவாக்கியவர்களின் பெயரில் இயங்கி வருகிறது. அப்போதைய காலக்கட்டத்தில் ஒருவருடன் பெயருடன் அவரது சாதி மத அடையாளங்களும் பள்ளிகளின் பெயரில் சேர்க்கப்படுவது வாடிக்கையானது. ஆனால், தற்போது அதைக்கொண்டு அரசியல் மற்றும் சர்ச்சைகள் ஏற்படுவதால், பள்ளி பெயர்களில்  உள்ள சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

ஏற்கனவே தென்மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் சாதி தலைவர்கள், மத தலைவர்கள்,  மதகடவுள்களின் பெயர்களில் பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், சாதிகள் பெயர்களை மட்டுமே நீக்க  வேண்டும் நீதிபதி கூறிய கருத்தும் பலமான விமர்சனங்களை ஏற்படுத்தியது.  மாணவர்களுக்கு கல்வி போதிக்க கல்விச்சாலைகளை உருவாக்கியவரின் பெயரில் உள்ள சாதிகளை அகற்றுவது, அவர்களை இழிவுபடுத்தும் செயல் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே அரசின் பல்வேறு திட்டங்களில் இன்றுவரை சாதிய பெயர்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், மக்களிடையே சாதி மத பேதங்களை வேரறுக்க வேண்டு மென்றால், முதலில் சாதி, மத  சான்றிதழ், சாதிய ஒதுக்கீடுகள், பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வேறுபாடுகளை களைய  நீதிமன்றம்  மற்றும் மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டுமே தவிர, பள்ளிகளின் பெயரில் உள்ள சாதியை மட்டும் நீக்க செல்வது எப்படி சரியாகும் என கேள்வி எழுப்பட்டு வந்தது. 

தமிழன் பகுத்தறிவற்றவன், தமிழ்மொழி காட்டுமிராண்டி என பெரியார் ராமசாமி நாயக்கரால் இகழப்பட்ட தமிழர்கள்தான்  இன்று உலக அளவில்  கல்வியில் முன்னேற அடித்தளம் அமைத்தது கல்விச்சாலைகளே.  பல்வேறு இனம் மற்றும் மதங்களை சான்றோர்கள் மற்றும் அவர்கள் உருவாக்கிய கல்விச்சாலைகளால்தான்  இன்று தமிழ்நாடு உலக நாடுகளுக்கு சவால்விடும் வகையில் முன்னேறி வருகிறது. என்பதை யாரும் மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. இந்த நிலையில், பள்ளிகள் மீதுள்ள சாதிய பெயர்களை அகற்றுவது மக்களிடையே சலசலப்பையே ஏற்படுத்தும்.

அப்படி என்றால், சாதி மட்டுமின்றி, மிகப்பெரிய அரசியல் களமாக மாறி வரும்,  மத அரசியலை கட்டுப்படுத்த மதத்தின்  பெயரிலான  பள்ளி, கல்லூரிகள், சங்கங்களை நீக்கவும் நீதிமன்றம்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசியல் மட்டுமின்றி இந்திய அரசியலே, மக்கள் நலனின் அக்கறை காட்டுவதற்கு பதிலாக,  சாதி, மதங்களை வைத்து,  மக்களை பிளவுபடுத்தி அதைக்கொண்டு, தங்களது அரசியல் தொழிலை நடத்தி கல்லா வரும் நிலையில்,  சாதி, மத குறியீடுகளை எப்படி நீக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தென்னிந்தியச் செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்ரவர்த்தி, சாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களைச் சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? என்பது குறித்தும், பள்ளிக்கூடங்களின் பெயர்களில் உள்ள சாதிகளின் பெயர்களை நீக்க முடியுமா? என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். மேலும், சாதி சங்கங்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் சாதிப் பெயருடன் உள்ள நிலையில், அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு “சாதிகள் இல்லையடி பாப்பா” என பாடம் நடத்துவது வேதனையாக உள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் சாதி வன்முறைகளைத் தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம், பள்ளிக்கூடங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற பரிந்துரைகளை வழங்கியும், பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது எனக் கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில், இவ்வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசுத்தரப்பில், பதிவு செய்த அனைத்து சாதி சங்கங்களும், தங்கள் சங்கம் “குறிப்பிட்ட சாதியினரின் நலனுக்கானது” என விதிகளில் திருத்தம் செய்ய கடந்த 2024ஆம் ஆண்டு அனைத்து சங்கங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது இந்த வழக்கு மீண்டும் நேற்று (மார்ச் 14) வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், இந்த வழக்கின் கோரிக்கைக்கும், நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும் தொடர்பில்லை? எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாதி சங்கங்களை பதிவு செய்வது தொடர்பாகவும், பள்ளிக்கூடங்களின் பெயர்களில் உள்ள சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழர்கள், தமிழ் மொழி குறித்து பெரியார் கூறியது என்ன?

தமிழர்கள் பிற்போக்குத்தனமானவர்கள் மற்றும் பகுத்தறிவற்றவர்கள் என்று விவரிக்கும் பல கட்டுரைகளை பெரியார் எழுதினார்.

தமிழர்கள் அரைக்கும் கல், பருத்தித் திரிகள், எண்ணெய் விளக்குகள், மாட்டு வண்டி, பனை ஓலை, மந்திரங்கள், யோக சக்தி போன்ற நடைமுறை பயன்பாடு இல்லாத பிற்போக்குத்தனமான கூறுகளை மட்டுமே கண்டுபிடித்ததாகக் கூறினார்.

தமிழர்களுக்கு நேரம் பற்றிய கருத்து இல்லை என்றும், அது ஆங்கில சமூகத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெரியாரை  பொறுத்தவரை, தமிழர்கள் இன உணர்வு, சுயமரியாதை, தேசியவாதம் மற்றும் மனிதாபிமானம் இல்லாத ஒரு கூட்டத்தினர்.

ஆனால்,  பெண் விடுதலைக்காக அவர் சில முன்னெடுப்புகளை எடுத்துச்சென்று மாற்றங்களை உருவாக்கினார் என்பதை யாரும் மறுக்க முடியாது.  அதே வேளையில் தமிழர் மற்றும் தமிழ்மொழி குறித்து அவர் கூறிய கருத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆனால், இன்று அவரைத்தான் ஒரு தரப்பினர், தங்களது தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுகிறார்கள்.

ஆதாரம்: thanks https://thecommunemag.com/

குறிப்புகள்:

  1. விடுதலை, சென்னை, அக்டோபர் 11, 1967
  2. விடுதலை, சென்னை, மார்ச் 16, 1967
  3. விடுதலை, சென்னை, ஜூன் 1, 1950
  4. https://swarajyamag.com/politics/பெரியார்-திராவிடக் கட்சிகளைப் பற்றி பத்து விஷயங்கள்
  5. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/61790/14/14_chapter%207.pdf

https://thecommunemag.com/how-did-periyar-view-tamil-and-tamil-society/