டெல்லி: ‘நீட்’ தேர்வை வருடத்திற்கு 2முறை நடத்தலாமா?, ஆன்லைன் மூலம் நடத்தலாமா என்பது குறித்து தேசிய தேர்வு முகமை மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கு, நுழைவுத்தேர்வாக மத்தியஅரசு நீட் தேர்வை கட்டாயப்படுத்தி உள்ளது. இந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணாக்கர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தமிழகம் உள்பட பல மாநிலங்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில், நீட்  நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு இரு முறை நடத்தலாமா? என்று கேட்டு தேசிய தேர்வு முகமை சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில்,  நீட் தேர்வு ஆண்டுக்கு ஒரே ஒரு முறை நடத்தப்படுவது, அது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிப்பதாகவும்,  எனவே, ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தலாமா? என்றும், வழக்கமான முறையில் நீட் தேர்வு நடத்துவது சற்று சிரமம் என்பதால் ஆன்லைனில் நடத்தலாமா என்றும் தேசிய தேர்வு முகமை கேள்வி எழுப்பியுள்ளது.