சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் உணவகம் ஒன்றில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதற்கு காசு தராமல் அமித்ஷாவை இழுத்து பேசிய பாஜகக்காரரின் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவெல்லிக்கேணியில் உள்ள அசைவ உணவகம் ஒன்றில், அந்த பகுதியைச் சேர்ந்த புருசோத் என்பவர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். அதற்கு கடைக்காரர் காசு கேட்டபோது, காசு தர மறுத்ததுடன், தான் பாஜக ஆள் என்றும், அமித்ஷாவிற்கு போன் செய்து, கடையை காலி செய்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். அவரிடம் தொடர்ந்து பணம் கேட்ட கடைக்காரை அநாகரிகமாகவும், கொலை மிரட்டல் விடுத்து பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் அந்த நபர் பாரதிய ஜனதா கட்சியில் திருவெல்லிக்கேணி பகுதி செயலாளர் புருசோத்தமன் என்பது தெரிய வந்தது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புருஷோத்தின் நடவடிக்கை பார்த்த பாஜகவினரே அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே பாஜகவினர் போராட்டத்தின்போது, பிரியாணிக்காக அண்டாவையே தூக்கிச் சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சிக்கன் ரைசுக்காக பாஜக நபர் அலப்பறை செய்த நடவடிக்கைமேலும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel