சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவியல் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள், ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், ; இத்திட்டத்தில் இதுவரை 1.14 கோடி பேருக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது என்று கூறியதுடன், இதுவரை மகளிர் உரிமை தொகை பெறாதவர்கள், பெறும் வகையில் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்காக மாநிலம் முழுவதும் 9,000 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான முகாம் நடைபெறவுள்ளது; அதில் விண்ணப்பிக்கலாம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால், தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர்.