டெல்லி: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை வளர்த்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளில் இந்தியா பிரசாரம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான, காங்கிரஸ் எம்.பி. சசிதரர், திமுக எம்.பி. கனிமொழி உங்பட 7 பேர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதை மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத தளத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 22ந்தேதி அன்று ( April 22, 2025) அங்கு சுற்றுலா சென்றிருந்த இந்து ஆண்களை பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயமுடன் சிகிச்சை பெற்றனர். இதையடுத்து மத்தியஅரசு, பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அத்துடன், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ”ஆப்ரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் மே 7ந்தேதி நள்ளிரவு, இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.44 மணியளவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்கின. இந்த தாக்குதலைத் தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “#பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பங்கரவாதிகள் முகாமிட்டுள்ளதாக கருதப்பட்ட, மிக முக்கியமான இலக்குகளில் ஒன்று பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தலைமையகம் ஆகும். மற்றொரு பெரிய தாக்குதல் சம்பாவுக்கு எதிரே உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள முரிட்கேவைத் தாக்கியது. சாக் அம்ரூ, முரிட்கே, கோட்லி, சியால்கோட், குல்பூர், பாக், முசாபெராபாத், பிம்பர், பஹவல்பூர் ஆகிய 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன.
இதையத்து இரு நாளுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், உலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்திய அரசின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க , குழு அமைக்கப்பட்டு, அந்த குழு மூலம் விரைவில் சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பயங்கரவாதத்திற்கு உதவும் பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளில் பிரசாரத்தில் ஈடுபட 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்த குழுவுக்கு தலைவர்களாக, காங்கிரஸின் சசி தரூர், பா.ஜ.க.வின் ரவிசங்கர் மற்றும் பைஜயந்த் பாண்டா, தி.மு.க.வின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சூலே, சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் சஞ்சஜ் குமார் ஜா ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுக்கள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க விரைவில் சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற நாட்டின் வலுவான செய்தியை அவர்கள் உலகிற்கு கொண்டு சேர்ப்பார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பான அவரது பதிவில், மிக முக்கியமான தருணங்களில், பாரதம் ஒன்றுபட்டு நிற்கிறது. ஏழு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுக்கள் விரைவில் முக்கிய பங்குதாரர் நாடுகளுக்குச் சென்று, பயங்கரவாதத்தை சகிப்புத்தன்மையற்றது என்ற நமது பகிரப்பட்ட செய்தியைக் கொண்டு செல்லும். அரசியல், வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய ஒற்றுமையின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பு என குறிப்பிட்டுள்ளார்.
