ண்டன்

முகநூல் பயனாளிகளின் தகவல்களை திருடி தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.  அவரது வெற்றிக்காக பணி புரிய பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம் பணி அமர்த்தப்பட்டது.    இந்த நிறுவனம் முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட பல சமூக வலை தளங்களில் ட்ரம்ப் குறித்த தகவல்களை அளித்து வந்தது.

இந்நிலையில் முகநூல் பயனாளிகளின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக சர்ச்சைகள் எழுந்தன.   இதை முகநூல் அதிபர் மார்க் ஒப்புக் கொண்டார்.   அவ்வாறு திருடப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.   இனி அதுபோல் திருடப்படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த சர்ச்சையினால் வாடிக்கையாளர்கள் மத்தியின் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் நம்பிக்கையை இழந்தது.   அதை ஒட்டி பல வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்துடனான வர்த்தக தொடர்பை முறித்துக் கொண்டுள்ளனர்.   இதனால் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.  அதனால் இந்த நிறுவனம் மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.