2016 ஆண்டிற்கான உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக கம்போடியா அறிவிக்கப்படுள்ளது
சுற்றுலா மற்றும் வர்த்தகத்தின் ஐரோப்பிய கவுன்சில் (ECTT), 2016 உலக சிறந்த சுற்றுலாத் தலம் என கம்போடியாவை பெயரிட்டுள்ளது.
இந்த ஆண்டு சுமார் 30 நாடுகள் இந்த ஒப்பற்ற விருதிற்காக போட்டியிட்டன, இதில் கம்போடியா, ‘கம்போடியா: தி லேண்ட் ஆஃப்மேஜிக்- தி ப்ளேஸ் வேர் காட்ஸ் அண்ட் கிங்க்ஸ் பில்ட் தி வர்ல்ட்!’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கை ஒப்படைத்தது என்று கடந்த புதன்கிழமை அன்று ECTT வெளியிட்ட ஒரு செய்தியில் வெளியானது.
அதன் ஒப்பற்ற கலாச்சார மற்றும் வரலாற்று பெருமையின் காரணமாகவும் சிறந்த இயற்கை அழகு காரணமாகவும் கம்போடியா விருதுகளில் முதல் இடத்தைப் பிடித்தது. “கம்போடியா எப்போதும் உங்கள் இதயத்தில் இடம்பெறும் ஒரு பாதுகாப்பான மற்றும் முதன்மையான இலக்கு ஆகும்,” என்று 28 ஐரோப்பிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட, புக்கரெஸ்ட்டை தலைமையிடமாகக் கொண்டுள்ள ECTT யின் தலைவர் பேராசிரியர் அன்டன் கராஜியா கூறினார்.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில், இரண்டு பண்பாட்டு தளங்களுக்கு கம்போடியா புகழ்பெற்றது. அதில் ஒன்று சியம் ரீப் மாகாணத்தில் உள்ள 12 ஆம் நூற்றாண்டு அங்கோர் தொல்பொருள் பார்க் மற்றொன்று ப்ரியா விஹார் மாகாணத்தில் உள்ள 11 ஆம் நூற்றாண்டில் ப்ரியா விஹார் கோயில் ஆகும்.
இதைத் தவிர, நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள நான்கு மாகாணங்களில் 450-கி.மீ. கடலோர ஊர்கள் உட்பட பல சுவாரசியமான எழில்மிகு சுற்றுலா தளங்கள், இந்தத் தென்கிழக்கு ஆசிய நாட்டில் உள்ளது.
சுற்றுலா அமைச்சகத்தின் படி, 2015 இல் கம்போடியா 4.8 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்து, $ 3 பில்லியனுக்கு மேல் மொத்த வருவாய் சம்பாதித்தது. கம்போடியாவில் சுற்றுலா வளர்ச்சிக்குப் பெரும் சாத்தியம் உள்ளது என்று ECTT யில் மணிக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் மதிப்பீட்டு இயக்குனரான பவெல் அவ்ரமொய் கூறினார்.
“உலகில் சிறந்த சுற்றுலா இலக்காக இப்போது பிரகடனம் செய்து கொள்ளும் கம்போடியா, இந்தச் சரியான வாய்ப்பையும் உலகளாவிய ஈர்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு, ஹோட்டல்கள் மற்றும் விருந்தோம்பல் துறையில் முதலீட்டாளர்கள் ஈர்க்க வேண்டும்,” என்று அவர் சொன்னார்
ஆங்கர் வாட் (நகரக் கோவில் ) என்பது ஆங்கர் கொவில்களில் சிறந்த மற்றும் மிகப்பெரிய கோவில் ஆகும். கம்போடியாவில் முக்கிய சுற்றுலாத் தளமாகும்.
இது 12 ம் நூற்றாண்டு வாக்கில் அரசர் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. இந்தக் கோவிலில் எழில்மிகு கட்டிட வடிவமைப்பு இதனை ஒரு முக்கியச் தொன்மையானச் சின்னமாக அடையாளப்படுத்தியுள்ளது. கோவிலைச் சுற்றியுள்ள செவ்வக வடிவிலான நீர்தேக்கக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இதன் கோபுரம் 669 அடி உயரம் உள்ளது.
ப்ரே விகெர் :கம்போடியா மற்றும் தாய்லாந்து எல்லையில், 1722 அடி உயர மலையில் அமைதுள்ள ப்ரே விகெர் எனும் கமெர் கோவில் 12 நூற்றாண்டில் கட்டப்பட்டது. கமெர் மன்னன் ஒன்றாம் சூரிய வர்மன் மற்றும் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. இது ஒரு சிவன் கோவில் ஆகும்.
இந்தக் கோவில் உள்ள நிலப் பகுதி கம்பொடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப்பதற்றம் நிறைந்த பகுதியாகும். இங்கு நடந்த சண்டையில் 2009 ஆண்டில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.