டெல்லி: தனியார்களுக்கு ஆதரவாக பெட்ரோல், டீசல் கலால் வரியை உயர்த்தி மத்தியஅரசு கொள்ளை அடிக்கிறது, இதுகுறித்து தணிக்கை செய்ய வேண்டும் என  காங்கிர எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார்.

மோடி அரசு, கலால் வரியை உயர்த்தி உள்ளது,  தனியார் நிறுவனங்களுக்கு கொள்கைகள் எவ்வாறு பயனளித்தன என்பதை CAG தணிக்கை செய்ய வேண்டும் என்றும், கடந்த பதினொரு ஆண்டுகளில் பெட்ரோலியத் துறையிலிருந்து அரசாங்கம் ரூ.39.54 லட்சம் கோடியை ஈட்டி உள்ளது , ஆனால் அது மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை.  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரான ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன. ஆனால், சமீப காலமாக  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், மத்தியஅரசு திடீரென கலால் வரியை உயர்த்தி உள்ளது. அதாவது,  பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மேலும் ரூ.2 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிந்துள்ள நிலையில் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுன், இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன.

இதுகுறித்து  தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும் எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ்,   “இந்திய மக்கள் கொள்ளையடிக்கப்படுகிறார்கள். ஒருபுறம், மோடி அரசாங்கம் வரிச்சுமையை அதிகரித்து மக்களின் பைகளைக் கொள்ளையடிக்கிறது. மறுபுறம், தனியார் மற்றும் அரசு எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை அறுவடை செய்கின்றன! இது வெளிப்படையான பொருளாதார சுரண்டல்.

மே 2014 இல், பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.9.20 ஆகவும், டீசல் மீதான கலால் வரி ரூ.3.46 ஆகவும் இருந்தது. இப்போது, மோடி அரசாங்கத்தின் கீழ், பெட்ரோல் விலை ரூ.19.90 ஆகவும், டீசல் ரூ.15.80 ஆகவும் உள்ளது. இது 357 சதவீதம் மற்றும் 54 சதவீதம் அதிகரிப்பாகும்.  கடந்த பதினொரு ஆண்டுகளில் பெட்ரோலியத் துறையிலிருந்து அரசாங்கம் ரூ.39.54 லட்சம் கோடியை ஈட்டியுள்ளது.

ஆனாலும், மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. மே 2014 இல், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 108 அமெரிக்க டாலர்களாக இருந்தது. இன்று அது 65.31 அமெரிக்க டாலர்கள். அதாவது இது 40 சதவீதம் மலிவானது. ஆனால் இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தை விட அதிகமாகவே உள்ளன. 2014 ஆம் ஆண்டில், டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.71.41 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.55.49 ஆகவும் இருந்தது.

இன்று அதே பெட்ரோல் ரூ.94.77க்கும், டீசல் ரூ.87.67க்கும் விற்பனையாகிறது. பொதுமக்கள் வெளிப்படையாகக் கொள்ளையடிக்கப்படுகிறார்கள். இதனால் யாருக்கு லாபம்?

மத்திய அரசு நிறுவனங்களுடன் சேர்ந்து, தனியார் எண்ணெய் நிறுவனங்களும் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் மூலம் பெரும் லாபம் ஈட்டுகின்றன. அதே நேரத்தில் விலையுயர்ந்த பெட்ரோல் மற்றும் டீசலால் சாமானிய மக்களுக்கு சுமையை ஏற்படுத்துகின்றன.

அரசாங்கக் கொள்கைகள் இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு எவ்வாறு பயனளித்துள்ளன என்பதை CAG தணிக்கை செய்ய வேண்டும். மேலும்,   இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே அலட்சியம் காட்டப்பட்டதா, கூட்டுச்சதி ஏதும் உள்ளதா  என்பதை சி.வி.சி மற்றும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். பொதுமக்களின் பணத்திற்கு கணக்கு காட்ட வேண்டும்”

இவ்வாறு வலியுறுத்தினார்.