டெல்லி: நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியல் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் மலைப்பகுதிகளில் வாழும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் கடந்த மார்ச் மாதம் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு மத்தியஅமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர்(எஸ்டி)ப ட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் கடிதம் எழுதியிருந்தார்.
நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் முன்டா தெரிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமூகத்தினரையும் சேர்க்க ஒப்புதல். பழங்குடியினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் இனி இப்பிரிவினருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜூன் முன்டா, “ பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பழங்குடியினத்துறை சார்பில் வைக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, இமாச்சலப்பிரதேசத்தில் டிரான்ஸ்-கிரி பகுதியில் வசிக்கும் ஹத்தி சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க ஒப்புதல் அளி்க்கப்பட்டது. இதனால், 1.60 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள். மேலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிரிஜ்ஜா சமூகத்தையும் பழங்குடியினப் பிரிவில் சேர்க்க ஒப்புதல் அளி்க்கப்பட்டது.
தமிழகத்தில் மலைப்பகுதிகளில் வசிக்கும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிக்குறவர் சமூகத்தினரையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel