டில்லி
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்டா முகர்ஜி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடும் போராட்டம் நடந்து வருகிறது. வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. பல இடங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்டா முகர்ஜி ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணிப்பிரிவில் தலைவியாக உள்ளார். அவர் இன்று டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.