நாக்கு தடுமாறிய டிரம்ப் : நண்பரின் பெயர் மாற்றம் : நகைச்சுவையான கூட்டம்

Must read

வாஷிங்டன்

மெரிக்கா ஊழியர் கொள்கை கூட்டத்தில் நாக்கு தடுமாறிய அதிபர் டிரம்ப் பெயரை தவறாக உச்சரித்தது நகைப்பை ஏற்படுத்தியது.

உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த அமெரிக்க ஊழியர் கொள்கை வாரிய கூட்டத்தில் கலந்துக் கொண்டார். இந்த கூட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்தினார்.

அவர் தனது உரையில் நாக்கு தடுமாறியதால் பெயர் மாற்றி உச்சரித்தது கடும் நகைச்சுவை ஆனது.  இந்த கூட்டத்தில் பேசும் போது ஆப்பிள் நிறுவன அதிகாரி டிம் குக் ஐ தனது நெருங்கிய நண்பர் என அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டினார். ஆனால் சிறிது நிமிடங்களுக்குள்ளேயே அவரை டிம் ஆப்பிள் என அழைத்தார்.

இது கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் இடையில் சிரிப்பை வரவழைத்தது.  பலரும் டிம் குக்கை செலமாக டிம் ஆப்பிள் என குறிப்பிடுவதை போல் இதுவரை டிரம்ப் அவரை குறிப்பிட்டதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஏற்கனவே டிரம்ப் பலரை இவ்வாறு தவறுதலாக குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article