னாஜி

கோவா மாநிலத்துக்கு புதிய முதல்வர் நியமிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

மத்திய பாஜக அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோவா முதல்வராக ஆனார். மனோகர் பாரிக்கருக்கு கணைய புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மும்பை, நியூயார்க், டெல்லி, கோவா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

அறுவை சிகிச்சைக்கு பிறகும் உடல்நலம் தேறாத மனோகர் பாரிக்கர் மூக்கில் பொருத்தப்பட்ட டியூப் உடன் வந்து இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். தற்போது அவர் உடல் நிலை மேலும் நலிவடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதை ஒட்டி கோவா மாநிலத்தின் தனிப் பெரும் கட்சி என்னும் நிலையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரை காங்கிரஸ் கட்சியினர் கேட்டுக் கொண்டனர்.

கோவாவுக்கு புதிய முதல்வர் மாற்றுவது குறித்து நேற்று துணை சபாநாயகர் மைக்கேல் லோபு தலைமையில் ஒரு குழு ஆலோசனை நடத்தியது. அந்தக் குழுவின் ஆலோசனை இன்றும் தொடர்கிறது. கோவா சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள வேறொருவரை முதல்வராக தேர்வு செய்வது குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதம் நடப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோவா முதல்வர் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.   பாஜக தலைவர்கள் தற்போது கோவாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.