டில்லி:

4 லோக்சபா, 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் மே 28-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,‘‘ மகாராஷ்டிராவில் 2 லோக்சபா தொகுதிகள், நாகலாந்து, உத்தரபிரதேசம் மாநிலங்களில் தலா ஒரு லோக்சபா தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் பஞ்சாப், பீகார் கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் மே 3-ம் தேதி தொடங்கும். வேட்பு மனு பரிசீலனை மே -11-ம் தேதி நடக்கிறது. மே 28-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.