சென்னை:

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர்  என்றும், வரும் வரும் 31-ஆம் தேதிக்குள் நிலைமை சீராகும் என்று நம்புவதாகவும் கூறினார்,

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்த பின் செய்தியாளரிகளிடம் பேசிய  அமைச்சர், கொரோனா தொடர்பாக  தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்றவர்,  ஸ்டான்லி மருத்துவமனையில் 31 படுக்கை வசதி கொண்ட தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்  கூறினார்.

கொரோனா தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் புதிய செயலி மற்றும் விழிப்புணர்வுக் குறும்படம் இன்று மாலை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தவர்,  வரும் 31-ஆம் தேதிக்குள் நிலைமை சீராகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியவர், தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும் கொரோனா தடுப்பு  ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என்றும், மருந்து கடைகளில்,  முக கவசம், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

தமிழகத்தில் முதன்முதலாக கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட  காஞ்சிபுரம் பொறியாளர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் அவருக்கு எந்த பதிப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.