சென்னை: தமிழக தொழில் முதலீடு காரணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது சிகாகோ சென்றடைந்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு தொழில் முலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதி சென்ற முதல்வர் ஸ்டாலின், முதலீட்டாளர்கள் மாநாடு, அமெரிக்க வாழ் தமிழர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அமெரிக்கவாழ் தமிழா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் நன்றி இந்த பயணத்தில், 4,600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எட்டு நிறுவனங்களுடன் ரூ.1,300 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

இதைத்தொடர்ந்து பல்வேறு நகரங்களுக்கு சென்று தொழில்நிறுவன உரிமையாளர்களை சந்தித்ததுடன், இந்திய வம்சாவழியினரையும் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டுக்கு தொழில்முதலீடுகளை ஈர்க்க வலியுறுத்தினார்.

இந்த நிலையில், இன்று அமெரிக்காவின்   சிகாகோ நகருக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளளார். சிகாகோ சென்றடைந்த  முதல்வர் ஸ்டாலினை அங்குள்ள தமிழர்கள் தமிழ் வம்சாவழியினர் வரவேற்றனார்.

இதைத்தொடர்ந்து அங்கு முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த பயணத்தன்போது, முதல்வருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அரசு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தகவலில், நியூயார்க், நியூஜெர்சி, வாசிங்டன், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பால்ட்டிமோர், பாஸ்டன், டாலஸ், ஹியூஸ்டன், பிலடெல்ஃபியா, அட்லாண்டா இப்படி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீங்கள் வசித்து வருகிறீர்கள். சில பேரை நான் குறிப்பிட மறந்திருக்கலாம். இப்படி பரந்து விரிந்த அமெரிக்கா முழுமைக்கும் தமிழர்கள் பரந்து இருக்கிறார்கள். தொழில் முதலீடுகளை ஈர்க்க நான் வந்திருந்தாலும், என் இனிய இந்திய சொந்தங்களின் முகங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்கு தான் நான் இப்போது இங்கு வந்திருக்கிறேன்.

அமெரிக்க நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் இடம் பிடித்திருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்குப் பிறகு இருதரப்பு வர்த்தகமும் மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது. இவையெல்லாம் இரண்டு நாடுகளுக்குமான நட்பின் அடையாளங்கள். தமிழ்நாடு என்பது அமெரிக்காவின் ஈர்ப்புக்குரியதாக இருக்கிறது. புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருப்பது தான் இதற்கு காரணம்.

300-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களுடைய திட்டங்களை நிறுவியிருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக அதிகமாக அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நேரில் அழைக்கத் தான் நான் வந்திருக்கிறேன். இந்த இனிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி மக்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களை தூண்ட வேண்டும் என்று உங்களை உரிமையோடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

மிகச் சிறந்த கல்வி, அந்த கல்வியில் அறிவுக் கூர்மை, தனித் திறமைகள், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை, குறிப்பிட்ட இலக்கை அடைய தளராத முயற்சிகள், இவை தான் உங்களை இந்த இடத்தில் கொண்டு வந்து உயர்த்தியிருக்கிறது. பணம், புகழ், அதிகாரம், வசதி வாய்ப்புகளை விட இந்த ஐந்தும் தான் உங்களை வளர்த்து இருக்கிறது. இந்த உயர்ந்த குணங்களை மற்றவர்களுக்கும் உணர்த்தி அனைவரின் வளர்ச்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

இந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோவில் தனது பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிகாகோ சென்றடைந்துள்ளார். அங்கு  பல நிறுவனங்களைச் சார்ந்தவர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.