சென்னை:

மிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஏழாவது நாளாக தொடர்கிறது.

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த நன்காம் தேதியில் இருந்து தமிழகம் முழுக்க போராட்டம் செய்து வருகின்றனர். ஊதிய உயர்வு உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இவர்கள் போராட்டம் நடத்த வருகிறார்கள்.

இதனால் தற்போது தற்காலிக போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

போராட்டம் குறித்த பேச்சு வார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்ட நிலையில், போராட்டம் இன்றும் தொடர்கிறது.

தங்களது கோரிக்கை ஏற்கப்படும்வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

ஊழியர்கள் ஒருபுறம் இப்படி அறிவித்திருக்க..  தமிழக அரசு இனி பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், பேருந்துகள் இயங்காமல் ஏழாவது நாளாக மக்கள் அல்லல் பட்டுவருகிறார்கள்.