
சென்னை,
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பஸ் போக்குவரத்து பெருமளவில முடங்கி உள்ளது.
இந்நிலையில ரெயில்வே பல இடங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்கி பொதுமக்களின் கஷ்டத்தை போக்கி வருகிறது.
ஊதிய உயர்வு, நிலுவை தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் இன்று 6வது நாளாக தொடர்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து புறநகர்களுக்கு அதிகமான ரெயில் சேவைகளை இயக்கி வருகிறது. அதுபோல தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது.
இந்நிலையில், திருச்சியில் இருந்து தஞ்சாவூர், அரியலூருக்கு ஜன.15ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக ரெயில்வே அறிவித்து உள்ளது.
மேலும், திருச்சியில் இருந்து தஞ்சாவூர் மற்றும் அரியலூருக்கு இன்று முதல் 15ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் வசதிக்காக 15ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
[youtube-feed feed=1]