சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மிழகம் புதுச்சேரி இடையேயான பேருந்து சேவைகள் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து 5வதுகட்ட தளர்வாக பொதுப்போக்குவரத்துக்கும் தமிழகஅரசு கடந்த செப்டம்பரில் அனுமதி வழங்கியது. இதையடுத்து, சுமார் 5 மாதங் களுக்கு பிறகு தமிழகத்தில், பொதுப்போக்குவரத்து, மாவட்டங்களுக்கு இடையே இன்றுமுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அண்டை மாநிலங்களுக்கு பேருந்து சேவை இதுவரை இயக்கப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது தமிழகம்-புதுச்சேரி இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. சுமார் 7 மாதங்களுக்கு பிறகு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேருந்து சேவைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக அரசாணையில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, புதுச்சேரிக்கு பயணிக்க இனிமேல் இ-பாஸ் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகம்-புதுச்சேரி இடையே பேருந்து சேவை உடனடியாக தொடங்குகிறது.