பெங்களூரு

ர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சபரிமலை சீசனுக்காக பெங்களூரு  நிலக்கல் இடையே அரசு பேருந்து சேவையை தொடங்க உள்ளது.

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 

”சபரிமலை சீசனையொட்டி பக்தர்களின் வசதிக்காக கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் பெங்களூரு-நிலக்கல் (பம்பை-சபரிமலை) இடையே ‘வால்வோ’ அரசு பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது.

பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து வருகிற 29-ந்தேதி முதல் தினமும் மதியம் 1.50 மணிக்கு வால்வோ அரசு பேருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.50 மணிக்கு நிலக்கல்லை சென்றடையும்.

மறுமார்க்கமாக நிலக்கல்லில் இருந்து வருகிற 29-ந்தேதி மாலை 6 மணிக்கு வால்வோ அரசு பேருஎது புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையத்தை வந்தடையும்.

இந்த வால்வோ பேருந்தில் டிக்கெட் கட்டணமாக ரூ.1,750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.’

எனக் கூறப்பட்டுள்ளது.