இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பேருந்து -லாரி நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் 33 பேர் உடல் நசுங்கி பலியாயினர். 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிழக்குப் பகுதியில் உள்ள சியான்கோட்டில் இருந்து ராஜன்பூருக்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு இந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

சியால்கோட் என்ற நகரை தாண்டி, மத்திய பாகிஸ்தானின் பிசியான தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாரதவிதமாக எதிரே வந்த ஒரு கண்டெய்னர் லாரி மீது பேருந்து வேகமாக மோதியது.

மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில், பேருந்தில் பயணம் செய்த 33 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 40 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்து வமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பேருந்து விபத்து அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.