ரவுண்ட்ஸ்பாய்:
“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” அப்படினு ஒரு படத்துல கவுண்டமணி பேசுற டயலாக் ரொம்பவே ஃபேமஸ். ஆனா, தமிழக பாஜக தலைவர் அக்கா தமிழிசை, ஒரு அசாதாரணமான அறிக்கை விட்டு அதிர வச்சிருக்காரு.
காவிரி விவகாரத்த முன்வச்சு நாளைக்கு தமிழகம் முழுக்க பந்த் நடக்குது இல்லையா… இதுல பாஜக கலந்துக்குதா இல்லையானு தெரியாத மாதிரி ஒரு சொல்லியிருக்காங்க அக்கா, தமிழிசை.
அதாவது பந்த் (முழு அடைப்பு)க்கு ஆதரவு தெரிவிக்கிறாங்களாம், பட், போராட்டங்களுக்கு ஆதரவு இல்லியாம்.
ஏன் இப்படி?
நாளைக்கு முழு அடைப்பு நடக்கிறபோது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சில இயக்கங்கள் முற்றுகை போராட்டம் நடத்தப்போறதா அறிவிச்சிருக்காங்க.
இதனாலதான், முழு அடைப்புக்கு முழு ஆதரவு தெரிவிச்ச பாஜக தமிழிசை, டக்குனு ரூட் மாறிட்டாராம்.
இது பத்தி அவர் என்ன சொல்றாருன்னா, “கர்நாடகத்தில தமிழர்கள் தாக்கப்படுறத கண்டிக்கிறதுக்காக கடை அடைப்புப் போராட்டம் நடத்தினா எங்க ஆதரவு டெபனட்டா உண்டு. ஏன்னா, எந்த காலத்திலும் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முதல் கட்சியா பாஜக இருக்குது. (யப்பாடி!)
ஆனா மத்திய அரசை கண்டிச்சு, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட போறதாவும் ரயில்களை மறிக்க போறதாவும் சில அமைப்புங்க அறிவிச்சிருக்கிறதில எங்களுக்கு உடன்பாடு இல்லே. அதனால போராட்டங்கள ஆதரிக்க முடியாது” அப்படின்னு சொல்றாரு.
“இருக்கு… ஆனா இல்லே…” அப்படினு ஒரு சினிமால காமெடி வருமே.. அதுமாதிரியும் இருக்கு இவரு பேசறது!