புல்டோசர் ராஜ்ஜியம்… 

உடையுங்கள் உடையுங்கள்
புல்டோசர் கொண்டு உடையுங்கள் உங்களால்
முடிந்தவரை !!!

உடைக்க முடிந்தது எங்கள்
கட்டடங்களை மட்டும் தான்
ஓஹ் புல்டோசர் ராஜ்ஜியமே !!

உங்களால் ஒருபோதும் உடைக்கவே முடியாது
எங்கள் உள்ள உறுதியை

உடையுங்கள் உடையுங்கள்
புல்டோசர் கொண்டு உடையுங்கள்
எங்கள் இல்லங்களை உடையுங்கள்…
உங்களால் ஒருபோதும்
உடைக்க முடியாது எங்கள் இதயங்களை !!

உடையுங்கள் உடையுங்கள்
ஓஹ் புல்டோசர் ராஜ்ஜியமே !!
உடைக்க முடிந்தது
எங்கள் வீட்டின்
சுவர்களைத் தான் !

உங்களால் உடைக்க முடியாதது
எங்கள் சகோதரத் துவத்தின் தூண்களை !!!

உடையுங்கள் உடையுங்கள்
புல்டோசர் கொண்டு உடையுங்கள் முடிந்தவரை…
உங்களால் உடைக்க முடிந்தது
வெறும் கதவுகளை மட்டும் தான்
எங்கள் கண்ணியத்தை அல்ல !!

ஓஹ் புல்டோசர் ராஜ்ஜியமே !!
உடையுங்கள் உடையுங்கள்
புல்டோசர் கொண்டு உடையுங்கள்…
உங்களால் உடைக்க முடிந்தது
எங்கள் மண் குடிசைகளை
மட்டும் தான் !!

உங்களால் ஒருபோதும்
உடைக்க முடியாது எங்கள்
உதிரத்தில் ஓடும்
மத நல்லிணக்கத்தை !!!

உடையுங்கள் உடையுங்கள்
புல்டோசர் கொண்டு உடையுங்கள்..
ஒஹ் புல்டோசர் ராஜ்ஜியமே !!
ஒருநாள்
உடைந்து போகட்டும்
உங்கள் ஒடுக்குமுறை

உடைந்து போகட்டும்
உங்கள் பேரின வாதம்

உடைந்து போகட்டும்
உங்கள் சர்வாதிகாரம்

உடைந்து போகட்டும்
உங்கள் புல்டோசர்கள் !!!

– கவிஞர் ஹிம்ரோஸ்