மதுரை:
மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் கட்டிட பணியின்போது 3 மாடி கட்டிடம் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் மாதவன் என்பவருக்கு சொந்தமாக 3 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிடம் திடீரென சரி்ந்து விழுந்ததில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.
இந்த விபத்தில் 7 பேர் மாட்டிக்கொண்டநிலையில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காசிநாதன், கார்த்திக், ராஜேஷ் மற்றும் முருகன் ஆகிய நான்கு பேர் மீட்கபட்டு படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் காசிநாதன் என்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூன்று பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனிடையே விபத்து நடந்த இடத்தில் மதுரை ஆட்சியர் ராஜசேகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.