தராபாத்

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை அரசு இடித்துள்ளது.

பிரபல நடிகர் நாகார்ஜுனா தெலுங்கானா மாநிலம் மாதப்பூரில் உள்ள தும்மிடிகுண்டா அருகே ஏரி நிலத்தை ஆக்கிரமித்து பிரமாண்ட கட்டடம் கட்டி இருப்பது தெரிய வந்தது. இந்த கட்டிடத்தில் ஏராளமான பிரபலங்கள் வீட்டு நிகழ்வுகள் நிகழுந்துள்ளன.

குறிப்பாக இந்த அரங்கில் தற்போதைய தெலுங்கானா முதல்வே ரேவந்த் ரெட்டியின் மகளின் திருமண நிச்சயதார்த்தம், நடிகர்கள் வருண் தேஜ், லாவண்யா தம்பதி திருமண வரவேற்பு விழா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் குடும்ப நிகழ்ச்சிகள் நடந்தன. இங்கு பல படங்களின் படப்பிடிப்புகள்ம் நடந்துள்ளது.

அரங்கு மொத்தம் 29.24 ஏக்கர் பரப்பளவில் அமந்துள்ளது, இங்கு 10 ஏக்கருக்கு கட்டடங்கள் மட்டுமே உள்ள நிலையில், 3.12 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது 2014-ம் ஆண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த கட்டடத்தின் ஆக்கிரமிப்புகளை ஐதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனம் இடித்து அகற்றியது.  அதிகாரிகள் பெரிய ராட்சத இயந்திரங்களுடன் சென்று 35 % கட்டுமானங்களை இடித்து தள்ளியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.