டெல்லி:

டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்  அமளியில் ஈடுபட்டதால், மதியம் 2 மணி வரை சபையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நேற்று தொடங்கியது. இதற்கிடையில் டெல்லியில் நடைபெற்ற இனக்கலவரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒத்தி வைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால், அதுகுறித்து உடனே விவாதிக்க முடியாது என்று மக்களவை மற்றும் மாநிலங்களை தலைவர்கள் கூறியதால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நேற்றும் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை சபை கூடியதும்,எதிர்க்கட்சிகள் டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபையை மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.