டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில், இந்த கூட்டத்தொடரில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 தாக்கல் செய்ய மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ப் 10ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாள் கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள், மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசி அமளியில் ஈடுபட்டனர். இதனால், மத்திய அமைச்சர் பிரதான், திமுக எம்.பி.க்கள் அநாகரிகமானவர்கள் என காட்டமாக விமர்சித்தார். இது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மத்தியஅமைச்சர் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், இன்றைய கூட்டத்தொடரில், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 (Immigration and Foreigners Bill 2025) தாக்கல் செய்யப்பட உள்ளது. துறை அமைச்சர், இந்த திருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.