டெல்லி: மத்திய பட்ஜெட்டில் அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
2022-23 நிதியாண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. அதையடுத்து மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் நாட்டின் வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இச்சூழலில் இன்று பலத்த எதிர்பார்ப்புகளுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர். சுமார் ஒன்றரை மணி நேரம் மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட இந்த காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டின்போது, “உலகளவில் இந்திய பொருளாதாரம் தான் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத் திற்காக மோடி அரசு செயலாற்றி வருகிறது. ஆகவே அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளமாக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.
பட்ஜெட்டில் அமைச்சகம் வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்:
பாதுகாப்பு துறை அமைச்சகம் – 525166.15 கோடி
உள்துறை அமைச்சகம் – ரூ. 185776.55 கோடி
தொலை தொடர்பு அமைச்சகம் – ரூ.105 06.82 கோடி
இரசாயனம் மற்றும் உர அமைச்சகம் – ரூ.107715. 38 கோடி
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் – ரூ.132513.62 கோடி
ஊரக வளர்ச்சத்துறை அமைச்சகம் – ரூ.138203.63 கோடி
ரயில்வே அமைச்சகம் – ரூ. 140367.13 கோடி
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் -ரூ. 199107.71 கோடி
நுகர்வோர் விவகார அமைச்சகம் உணவு மற்றும் பொது விநியோகம் துறை – ரூ.217684.46 கோடி