பட்ஜெட் தொடர்ச்சி….
வங்கிகளில், முதலீட்டாளர்களின் வைப்புத் தொகைக்கான காப்பீடு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவத்தார்.
இதுநாள் வரையில், ஒவ்வொரு வங்கியின் ஒவ்வொரு வைப்புதாரரின் வைப்புகளில் அதிகபட்சமாக ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம்) வரை காப்பீடு செய்யப்படுகிறது
வங்கிகள் திவாலானால் வைப்புத் தொகையில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை திருப்பி அளிக்கப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
2022ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டிற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு
முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
மூத்த குடிமக்கள், உடல் ஊனமுற்றோர் நலனுக்கு ரூ.9500 கோடி ஒதுக்கீடு
நேரடி வரிவிதிப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய திட்டம் அமல்படுத்தப்படும்
பங்கு விற்பனை மூலம் ரூ.2.10 லட்சம் கோடி நிதி திரட்ட இலக்கு
மருத்துவ உபகரணங்கள் செய்வதற்கு இறக்குமதி வரி விதிக்க திட்டம்
ஸ்வச் பாரத் மிஷனுக்கு 2020-21ஆம் ஆண்டுக்கு ரூ .12,300 கோடி ஒதுக்கீடு.
இளைஞர் மற்றும் மீன்வள விரிவாக்கப் பணிகளை கிராமப்புற இளைஞர்கள் ‘சாகர் மித்ராஸ்’ என்ற திட்டத்தின் மூலம் 500 மீன்பிடி தொழிலாளர்களை உருவாக்கப்படுவார்கள்.
பொதுவாக ஒரு நிறுவனத்தின் லாபங்களை அந்நிறுவனத்தின் நிறுவனர்கள், சிறு முதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் என அவர்கள் வைத்திருக்கும் பங்குகள் அடிப்படையில் டிவிடெண்ட் வழங்கப்படுவது வழக்கம்.
இதற்கு தற்போது 15 சதவீதம் வரை வரிவிதிக்கப்படுகிறது. இந்த டிவிடெண்ட் விநியோக வரியை( ஈவுத்தொகை விநியோக வரி) தற்போது மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.
மகளிர் நலத்திட்டங்களுக்கென 28,600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நேரடி வரிகளுக்கான மத்திய ஆணையத்தின் விதிமுறைகளில் திருத்தங்கள் கொண்டு வரப்படும், வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய எளிமைப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறை அமலாக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.