லக்னோ:
உத்தரபிரதேச மாநில முதல்வராக மாயாவதி இருந்தபோது, மாநிலத்தில் நினைவிடங்கள் கட்டப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
சுமார் 111 கோடி ரூபாய் அளவுக்கு இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அமலாக்கத்துறையினர் இன்று மாயாவதிக்கு சொந்தமான 7 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
உ.பி. முதல்வராக கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை மாயாவதி இருந்தபோது, தாஜ்மஹால் அருகே மல்டி ப்ளெக்சுகள், உணவகங்கள், குழந்தை களுக்கான விளையாட்டுப் பூங்கா போன்றவை கட்ட அனுமதி அளித்தார். அதுபோல மறைந்த பிஎஸ்பி தலைவர் கன்சிராமுக்கு நினைவாலயம் உள்பட பல கட்டிடங்களையும் அதற்குரிய துறையிடம் அனுமதி பெறாமல் கட்டியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம், அப்போதே கடும் எதிர்ப்புகளை சந்தித்து. இதில் 1,400 கோடி ரூபாய் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை சார்பில் இன்று மாயாவதிக்கு சொந்தமான கோமதி நகர் மற்றும் ஹஷ்ரட்கானி உள்பட 6 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.