டெல்லி

டிகர் விஜய் யின் தமிழக வெற்றிக் கழகம் கொடி குறித்து பக்ஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளது.

கடந்த ஆக.ஸ்ட் 22ம் தேதி நடிகர் விஜய் தனஹ்டு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்தினார். அந்தக் கொடியில் சிவப்பு – மஞ்சள் – சிவப்பு நிறங்களில் இரட்டை போர் யானைகளும், நடுவே வாகை மலரும் இடம்பெற்றிருந்தது.

கட்சியின் முதல் மாநில மாநாட்டின் போது இதற்கு விரிவான விளக்கத்தை அளிப்பதாக விஜய் கூறினார். ஆயினும் பலர் அதற்கு முன்னதாகவே பலதரப்பட்ட விளக்கங்களை அளித்து வருகின்றனர். மேலும் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

விஜய் தொடர்ந்து கட்சிக் கொடி குறித்து பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார். முதலாவதாக பகுஜன் சமாஜ் கட்சி தவெக கொடியில் உள்ள யானையை நீக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.  தற்போது பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளது