லக்னோ: உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மாயாவதி அறிவித்து உள்ளார்.

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந் நிலையில் இது குறித்து பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பேசியதாவது:
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல்களுக்கு எந்தவொரு கூட்டணியிலும் இடம்பெற மாட்டோம். அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பிஎஸ்பி கட்சி தனித்துப் போட்டியிடும்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாக வழங்குவோம் என்று மாயாவதி தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel