புதுடெல்லி:

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஜுன் மாத சம்பளம் வழங்கப்பட்டது.

மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஜுன் மாத சம்பளத்தை ஊழியர்களுக்கு பிஎஸ்என்எல் நிர்வாகம் வழங்கியது.

இது குறித்து பிஎஸ்என்எல் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு அனைத்து ஊழியர்களுக்கும் ஜுன் மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.750 சம்பளம், 800 கோடி கடன்களுக்கு பெற்ற வட்டி மற்றும் மீதமுள்ள தொகை மின் கட்டணம் போன்ற தேவைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த ரூ.14 ஆயிரம் கோடி தேவை என மத்திய தொலை தொடர்புத் துறையிடம் கேட்கப்பட்டது. இதுவரை அந்த பணம் வரவில்லை.

பென்ஷன் தொகை, நக்சல் பாதிப்பு பகுதிகளிலிருந்து வரவேண்டிய நெட்வொர்க் சேவை கட்டணம், ஸ்பெக்ட்ரத்துக்கான வட்டி ஆகியவை அரசிடமிருந்து வரவேண்டியுள்ளது என்றார்.