ரிலையன்ஸின்  ஜியோவுக்கு போட்டியாக அதிரடி சலுகைகள் மூலம் களத்தில் குதிக்கிறது ஏர்ல்டெ மற்றும் பிஎஸ்என்எல் .
ரிலையன்ஸ்  ஜியோவின்  அறிவிப்பை தொடர்ந்து,  தற்போது, அனைத்து  தொலை தொடர்பு நிறுவனங்களும்,  சலுகைகளை வாரி வழங்குகின்றன.  அந்த வரிசையில் தற்போது, பிஎஸ் என் எல்  நிறுவனமும் சலுகையை அறிவித்துள்ளது.
bsnl
வாழ்நாள் முழுவதும் இலவச போன்கால்  – பிஎஸ்என்எல்
இது குறித்து,  பிஎஸ்என்எல்   தலைவர்  அனுபம் வாஸ்தவா சில அறிவிப்புகளை  வெளியிட்டுள்ளார்.
அதாவது,  ஜியோ உட்பட மொபைல் சந்தை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து  வருவதாகவும்,  இதன் அடிப்படையில் வாழ்நாள் முழுவதும் இலவச அழைப்பு பிளான் அறிவிக்க உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். ஆனால் ஜியோவை விட குறைவான டேட்டா சேவையை  வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதாவது, 4ஜி மட்டுமின்றி,  2ஜி, 3ஜி யை  பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும்  பயன்பெறும்  வகையில், தங்கள்  சேவை  இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
airtel-4g-lte-review-delhi-1024x453
4G  சேவை முற்றிலும் ப்ரீ- ஏர்டெல்…
ரிலையன்ஸ் ஜியோவை  தொடர்ந்து,  ஏர்டெல் நெட்வொர்க்கும் தற்போது  சலுகைகளை  வாரி வழங்குவதில்  இறங்கியுள்ளது.
ஜியோவை போன்றே,  ஏர்டெல லும்,  4G  சேவையை  முற்றிலும் ப்ரீயாக  வழங்க  முடிவுசெய்து அதற்கான திட்டத்தை வெளியிட்டு உள்ளது.
அதன்படி,  ரூபாய் 1,495  ரூபாய்க்கு முதலில்  ரீசார்ஜ் செய்தால்,  மூன்று  மாதங்களுக்கு,  4G  சேவை தங்கு தடையின்றி  கிடைக்கும். ஒருமுறை  ரீ சார்ஜ் செய்தால் போதும்,  மூன்று மாதங்களுக்கு  எல்லையில்லா  டேட்டா  பயன்படுத்தி கொள்ளலாம் .
 இந்த  ஆபர்  90  நாட்களுக்கே  மட்டுமே ……!
இந்த ஆபர்,  டெல்லியில்,  அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. படிப்படியாக  இந்திய முழுவதும்  நடை முறை படுத்தப்படும்  என  ஏர்டெல்  நிறுவனம்  தெரிவித்துள்ளது.