தியா,  மேற்கு வங்கம்

பிரதமரின் பெயரோடு திரு அல்லது மரியாதைக்குரிய என கூறாத ராணுவ வீரருக்கு அபராதம் விதிக்கபடுள்ளது.

ராணுவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை பிரிவில் சஞ்சய் குமார் என்பவர் பணி ஆற்றி வருகிறார்.   இந்தப் படையில் உள்ள வீரர்கள் தங்களின் வருகையை பதிவு செய்யும் போது ”மரியாதைக்குரிய பிரதமர் மோடி புரோக்ராம்”  அல்லது “பிரதமர் திரு மோடி புரோக்ராம்” எனக் கூறுவது வழக்கம்.

சென்ற மாதம் 21ஆம் தேதி சஞ்சீவ் குமார் வருகையை பதிவு செய்யும் போது “மோடி புரோக்ராம்” எனக் கூறி உள்ளார்.   இதனை எல்லைக்காவலர் படை சட்டத்தின் படி குற்றம் எனக் கூறி எல்லைக் காவல் படை சஞ்சீவ் குமாருக்கு அவருடைய 7 நாள் ஊதியத்தை அபராதம் விதித்துள்ளது.

[youtube-feed feed=1]