மும்பை

ன்றைய பங்கு வர்த்தச் சந்தை தொடக்கத்திலேயே உயர்ந்து காணப்படுகிறது.

இன்றைய (செப்டம்பர் 23) பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 991.17 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து, 39,005.79 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.  அதைப்  போலவே தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 291 புள்ளிகள் உயர்ந்து 11,565 புள்ளிகள் வரை சென்றுள்ளது.

இன்றைக்கு முன்னதாக, பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு எதிரொலியால் இந்தியப் பங்குச் சந்தைகளில் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,921 புள்ளிகள் (5.32%)   அதிகரித்து 38,014 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 569 புள்ளிகள் (5.32%) உயர்ந்து 11,274 புள்ளிகளில் நிலைபெற்றது.

பங்குச் சந்தை வர்த்தக வரலாற்றில்  கடந்த 10 ஆண்டுகளில் ஒரே  நாளில் சென்செக்ஸ் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறையாகும்.