ண்டன்

பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் 9 மணி நேரத்தில் 51 பப்புகளுக்கு சென்று குடித்து கின்னஸ் சாதனைப் புரிந்துள்ளார்.

உலகெங்கும் நடைபெறும் சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுகின்றன.  இவற்றுக்கு எவ்வித வறையறையும் இல்லாமல் அனைத்து சாதனைகளை செய்யும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பெயர்கள் இங்கு இடம் பெறுகிறது.   இந்த சாதனை புக்கதகத்தில் இடம் பெற பலர் பல விசித்திர சாதனைகளைச் செய்து வருகின்றனர்.   சமீபத்தில் குடிப்பதில் ஒரு இளைஞர் சாதனைப் புரிந்துள்ளார்.

அந்த சாதனைக்கு சொந்தக்காரர் மாட் எல்லிஸ் என்ற பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் ஆவார். இவர் மது குடிக்கும் பப்புக்கு சென்று குடித்து சாதனை படைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 9 மணி நேரத்தில் 51 மதுக்கடைகளுக்குச் சென்று குடித்து ஒரு புதிய “உலக சாதனை” படைத்துள்ளார். ஒவ்வொரு பப்பிலும் குறைந்தது 125 மில்லி குடிக்க வேண்டும் என்பதன்படி குடித்துள்ளார்.

மாட் எல்லிஸ் மதுவுடன் கலந்து குடித்ததில் பெரும்பாலும் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் டயட் கோக் ஆகியவை ஆகும்.  இந்த சாதனைக்காக அவர் 6.3 லிட்டர் மது மற்றும் குளிர்பானம் குடித்துள்ளார். மாட் எல்லிஸ் எல்லா வகையான மதுக்கடைகளுக்கும் செல்பவர் ஆவார்.   அவருக்கு நிறைய பப்புகளுக்குச் செல்வது பிடிக்கும் என்பதால், இதனையே ஒரு சாதனையாகச் செய்தால் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.

9 மணி நேரத்தில் நடந்த இந்த சாதனை பதிவை கின்னஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்குச் சமர்ப்பித்துள்ளார்.  விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2011ல் 13 பேர் கொண்ட குழு 24 மணி நேரத்தில் 250 பார்களில் குடித்தார்கள்.  எனவே மாட் எல்லிஸின் சாதனையை அங்கீகரித்தால், இந்த சாதனையைச் செய்த தனி நபர் என்ற பெயர் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.